Search

பலதும் பத்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலதும் பத்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 அக்டோபர், 2025

ஏழாலை





ஏழாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழைகட்டுவன்குப்பிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் குப்பிளான்புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களும், தெற்கில் சுன்னாகம்ஊரெழு ஆகிய ஊர்களும், மேற்கில் மல்லாகமும், உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்கள்

ஏழாலையில் ஏழு ஆலயங்கள் இருந்ததனால் ஏழாலை எனப் பெயர் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர். இவ் ஏழு ஆலயங்களைப் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு காணலாம்:

  1. ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலயம்
  2. ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம்
  3. ஏழாலை புங்கடி அம்பலவாணேஸ்வரர் ஆலயம்
  4. ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம் (இது முன்னர் "அத்தியடி புவனேஸ்வரி அம்மன் ஆலயம்" என்று அழைக்கப்பட்டிருந்தது
  5. ஏழாலை பெரியதம்பிரான் கோவில் (ஏழாலை மத்தி)


ஆனால் இவ்வாலயங்களைத் தவிர ஏனைய சிறு ஆலயங்களும் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களும் இவ்வூரில் உள்ளன.

யாழ்ப்பாணத்தின் கல்வி, கலாசாரம், ஆன்மீக மையம்

📍 இடம் மற்றும் இயற்கை அழகு

எழாலை, இலங்கையின் வடக்கு மாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், தோட்டங்கள், குளிர்ச்சியான சூழல் ஆகியவை இக்கிராமத்தின் இயற்கை அழகை உயர்த்துகின்றன. விவசாயம், குறிப்பாக காய்கறி சாகுபடிகள், மக்கள் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.

🛕 ஆலயங்கள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை

எழாலை, யாழ்ப்பாணத்தில் ஆன்மீக மற்றும் மதச் சிறப்புக்குப் பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள கோவில்கள் சமூகத்தை ஒன்றிணைக்கும் முக்கிய பங்காற்றுகின்றன.

   1. ஏழாலை மேற்கு கருணாகரப்பிள்ளையர் மடாலயம். 1910 களில்                   சடைவரத சுவாமிகளின் ஆசியுடன் சித்த வைத்தியர் ஐயம்பிள்ளை               பொன்னையா அவர்கள் ஸ்தாபித்தார்.

   2. எழாலை முருகன் கோவில் – மிகவும் புகழ்பெற்ற திருத்தலம்; வருடாந்திர        திருவிழாக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன.

    3. எழாலை நாகதம்பிரான் கோவில் – பாரம்பரிய சடங்குகள், தெய்வ                   நம்பிக்கைகள், பழங்கால வரலாற்றை தாங்கி நிற்கிறது.

    4. சித்தர் ஆலயம் மற்றும் பிற சிறு கோவில்கள் – மக்கள் நம்பிக்கை,                   ஆன்மிக மரபுகள், கிராம ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகின்றன.

🎓 கல்வி மற்றும் கல்விமான்கள்

எழாலை, கல்வி மரபில் சிறப்பிடம் பெற்ற கிராமம். பல கல்விமான்கள் இங்கிருந்து உருவாகி, யாழ்ப்பாணத்தின் அறிவுச்சுடராக விளங்கினர்.

  1. எழாலை மகா வித்தியாலயம்  இங்கு கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
  2. கல்வியை முன்னிறுத்திய அறிஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சட்டவாதிகள் என பலர் எழாலையின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றுள்ளனர்.

🎭 பண்பாடு மற்றும் பாரம்பரியம்

எழாலை கிராமம் தமிழர் பண்பாட்டு மரபில் ஆழமாகப் பதிந்துள்ளது.

  1. கோவில் திருவிழாக்கள், இசை, நடனம், வாத்தியக் கலைகள் மக்கள் வாழ்வின் அங்கமாக இருக்கின்றன.
  2. பாரம்பரிய மதச்சடங்குகள், குடும்ப ஒற்றுமை, சமூக விழாக்கள் கிராமத்தின் அடையாளமாக உள்ளன.

📜 வரலாற்று மற்றும் சமூக முக்கியத்துவம்

பழங்காலத்திலிருந்தே எழாலை, கல்வி, மதம், விவசாயம் ஆகியவற்றின் மையமாக திகழ்ந்து வந்துள்ளது. போர், இடம்பெயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டாலும், மக்கள் தங்களின் கடின உழைப்பாலும் ஒற்றுமையாலும் மீண்டும் எழுந்து நிற்கின்றனர்.

🌱 இன்றைய எழாலை

இன்றைய எழாலை, பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் இணைத்து முன்னேறி வருகிறது.

  1. வெளிநாடுகளில் வாழும் எழாலையர்கள் தங்களின் கிராம முன்னேற்றத்தில் பங்காற்றுகின்றனர்.
  2. கல்வி, விவசாயம், தொழில், ஆன்மிகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

எழாலை என்பது ஒரு சாதாரண கிராமம் அல்ல; அது அறிவின் நிலம், ஆன்மீகத்தின் மையம், பண்பாட்டு செழிப்பின் சின்னம். கல்விமான்கள், ஆலயங்கள், பாரம்பரிய விழாக்கள் அனைத்தும் எழாலையின் பெருமையை உலகளவில் பரப்பி வருகின்றன.

https://www.youtube.com/watch?v=45o8Tt2oZAU

https://www.youtube.com/watch?v=XmceK1ZHamE

https://www.youtube.com/watch?v=q-mFPgvxfEk

https://www.youtube.com/watch?v=qs5Iws2j70I

திங்கள், 29 செப்டம்பர், 2025

நிலக்கடலை






*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

திங்கள், 22 செப்டம்பர், 2025

வீணாகிறதே என்று சாப்பிட்டால் வீணாகிவிடும் நம் உடம்பு




பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ.. காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே..’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ‘‘அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!’’ .

ஊட்டச்சத்து அதிகமானால்.. ஊளைச்சதை!

‘‘ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான்.

கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.

ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஃப்ரிட்ஜில் உணவுகள் கொண்டுவரும் பிரச்னைகள்!

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடும். மேலும், ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஒபிசிட்டி, இதயநோய் என்று விளைவுகள் தீவிரமாக இருக்கும்.

காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பை வரவழைக்கும்.

அசைவ உணவு வகைகளைச் சூடுசெய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.

பழங்களும் அளவாகவே..!

மைக்ரோ ஊட்டச்சத்து வகையில் விட்டமின் `ஏ’, `சி’, `இ’, `டி’, இரும்புச் சத்து போன்றவை அடங்கும். இந்தச் சத்துகள் எல்லாம் பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. குழந்தை சாப்பிடவில்லை, மீதமாகிவிட்டது என ஏதோ ஒரு காரணத்தால் தேவையான அளவுக்கும் ‘எக்ஸ்ட்ரா’வாக இவற்றைச் சாப்பிடுவது அன்றாடம்தான்.

இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வாந்தி, மயங்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தலைவலி, ஓய்வின்மை, பதற்றம் போன்ற உடனடிக் கோளாறுகளை உடலில் உண்டு பண்ணும். மைக்ரோ சத்துக்களை சமமாகச் சாப்பிடும் போதுதான், உடலில் மெட்டபாலிஸம் சரியாக இருக்கும்.

தொடர்ந்து ஒரே வகை பழம், காய் என்று அதிகளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டுபண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்.

உதாரணமாக, கால்சியம் சத்தை உடல் கிரகிக்க விட்டமின் `டி’ தேவை. ஆனால், கால்சியம் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியமானது... விட்டமின் `டி’ தேவையை உடலில் ஈடுசெய்ய விடாது, அந்த நேரம் கால்சியமும் உடலில் தங்காது. இது புதிதாக ஒரு பிரச்னையை உண்டுபண்ணி, கால்சியம் குறைபாடாக மாற்றிவிடும்.நீர்ச்சத்து உணவுகளை அதிகளவு சாப்பிடும் போது அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். எனினும், சிறுநீரகத்துக்கு அது அதிகப்படியான வேலையாக இருக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்.

மனதளவிலும் பிரச்னைகள்..!

உடற்செயல்பாட்டுப் பிரச்னைகள் தவிரவும், மனதளவில் இது ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. உணவு வீணாவது பற்றிய கவலை முதலில் மனதை சோர்வுற வைக்கும். வீணாக்காமல் அதைச் சாப்பிட்ட பிறகு, தேவைக்கும் அதிகமாக உள்ளே தள்ளியதைப் பற்றிய எண்ணமும் உறுத்திக் கொண்டே இருக்கும்.

இதெல்லாம் மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல, குடும்பம், குழந்தை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அடங்கிய பிறகு வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.

இதற்கெல்லாம் சிம்பிள் தீர்வு..

வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது. அப்படியே எதிர்பாராத காரணங்களால் உணவு மிகுந்து போனாலும், வீட்டில் வேலை பார்க்கும் பெண், தெருமுனையில் அமர்ந்திருக்கும் ஆதரவற்ற முதியவர் என்று தேவை இருப்பவர்களுக்கு அதைக் கொடுங்கள். அல்லது அதை எந்த மனச் சலனமும் இல்லாமல் குப்பையில் கொட்டுங்கள். ஏனெனில், வீணாகும் உணவைவிட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம். கிச்சனில் வேஸ்ட்டாவதைப் பற்றிக் கவலைப்பட்டு, மருத்துவச் செலவுகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்!’’.

வியாழன், 18 செப்டம்பர், 2025

ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம்

 ஒரு பழமொழி ஒன்று உண்டு. குதிரைக்கு தண்ணீர்தான் வைக்க முடியும். அதை குடிக்க வைக்க முடியாது. குடிக்கும் வேலையை குதிரை தான் செய்ய வேண்டும்.வெறுமனே கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா, பிரசாதத்தை வாங்கினோமானு வந்துட கூடாது. சிவன், கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும், எந்த கோவிலாக வேண்டுமானாலும், எந்த வழிபாட்டு ஸ்தலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறிது நேரம் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த பழக வேண்டும்.ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்க்கே ஒரு தனி சக்தி உண்டு. கோவிலுக்கு நல்லவர்கள் அதிகம் வருவார்கள். நாம் ஆலயத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த முயற்சிக்கும் பொழுது, பலரின் நல்ல எண்ண அலைகள் நமது மனதிலே ஊடுருவும்.சிலர் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே மனத்தில் வெறுப்பு வரும். காரணம், அந்த மனிதரின் என்ன அலைகள் உங்களை அவ்வாறு வெறுப்படைய செய்கிறது.மிக பிரசித்தி பெற்ற சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே மனம் சற்று அமைதி பெறும். அடுத்த சில நிமிடங்களில் விவேக் காமெடீ போல், புதிதாக வாங்கிய செருப்பில் இருந்து ஆரம்பித்து, வீட்டில் ஊசி போன பருப்பு வரை, பொறுப்பே இல்லாமல் நமது மனம் எதை, எதையோ நினைக்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள் சிலர், மனம் குதிரையை விட வேகமாக ஓட கூடியது என்பார்கள் சிலர். மனத்தை விட வேகமாக ஓட கூடிய ஒரு ராக்கேட்டை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இனிமேலும் கண்டு பிடிக்க முடியாது. ஒலியின், ஒளியின் வேகத்தை விட மனோவேகம் அதீத வேகம் வாய்ந்தது.மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால்? மோசமான எஜமானன். நீங்கள் வண்டி ஒட்டும் பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் ஒட்டும் வண்டி இருக்க வேண்டும். வண்டி கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால். மனத்தை போல் அதீத வேகத்தில் இயங்க கூடிய வாகனம் அகில உலகங்களில் எங்குமே இல்லை. அதை மனித சக்தியால் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. உங்கள் மனத்தை இறைவனோடு இரண்டற நீங்கள் கலந்தால் அடுத்த நொடியே உங்கள் மனம் இறைவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். உங்கள் மனத்தை கட்டுப்படுத்தும் சாரதி இறைவனே.நீங்கள் ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் வந்தால், நீங்க்ள் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத ஃபோன் கால் வந்தால் அதை அட்டர்ன் பண்ணாமலேயே கட் பண்ற மாதிரி, தேவையில்லாத எண்ணங்களை கட் பண்ணுங்க. உங்கள் மனத்தில் கடவுளின் உருவத்தை மட்டுமே நினையுங்கள். எந்த கடவுள் உங்களின் இஷ்ட தெய்வமோ அந்த கடவுளின் உருவத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து தியானம் செய்யுங்கள்.ஆலயம் என்பது ஆனந்த பிரவாகம் சுரக்கும் இடம். அங்கு நீங்கள் மனத்தை ஒருமுகபபடுத்த முயன்றால் மற்ற இடங்களில் நீங்கள் தியானம் பழகுவதற்கும், ஆலயங்களில் தியானம் பழகுவதற்கும் உள்ள வித்யாசத்தை உணரலாம். அதிலும் முதன் முறையாக தியானம் பழகுபவர்கள் ஆலயத்தில் தியானிக்கும் பொழுது, உங்கள் ஆன்மா எளிதாக லயப்படும், வயப்படும், புரியாத பல ஆழ்மன சூட்சுமங்கள் புலப்படும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக நீங்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.நம்முடைய ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். அதிலும் பல நூறு ஆண்டுகளாக பூஜை நடக்கும், மிக புராதனமான ஆலயங்களில் நாம் அதிக, அதீத, தெய்வீக அதிர்வலையை உணரலாம்.

வாழ்க வளமுடன்...



 

 வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம்,

முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்.

முதுமை சீக்கிரம் போகாது.

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.இளமையில் சாப்பிட்ட அத்தனையும் முதுமையில் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்க வேண்டும் இறுதி காலத்தில்.சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும் சிவபெருமான் திருவடிக்கு .சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றால், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.

நமசிவாய வாழ்க.....

திருச்சிற்றம்பலம்.....

Asia 1