Search

சனி, 20 செப்டம்பர், 2025

நகைச்சுவை

உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

முருகேசு:- கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂

கடவுள் - தாராளமாகக் கேள் மகனே..

முருகேசு - பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?

கடவுள் - கண்டிப்பாக..

முருகேசு - இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..?😐

கடவுள் - என்னப்பா சொல்ற நீ..?

முருகேசு - எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. !

கடவுள் - ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..

முருகேசு - கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..😢

கடவுள் - ஆமாம்.. எனக்குத் தெரியும்.

முருகேசு - சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல.. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.😨

கடவுள் - ஆமாம்..! தெரியுமே..

முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.😤

கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.

முருகேசு - வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.😟

கடவுள் : ஆமாம், தெரியும்.

முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து. டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..😖

இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?😭

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!😳😳

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..😦

கடவுள் :மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..?

முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!😰

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை

முருகேசு : ம்ம்...😧

கடவுள் :அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞

ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க ??

😨😨😡😡😡

*கேட்டாம்பாரு ஒரு கேள்வி*...

👆👆👆 கடவுள் குடுத்தாரு பாரு ஒரு பதில்::: மவனே நீ சாமி கும்பிட ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்கப்புறம் தானே!! 😀😀

வியாழன், 18 செப்டம்பர், 2025

ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம்

 ஒரு பழமொழி ஒன்று உண்டு. குதிரைக்கு தண்ணீர்தான் வைக்க முடியும். அதை குடிக்க வைக்க முடியாது. குடிக்கும் வேலையை குதிரை தான் செய்ய வேண்டும்.வெறுமனே கோவிலுக்கு போனோமா, சாமியை கும்பிட்டோமா, பிரசாதத்தை வாங்கினோமானு வந்துட கூடாது. சிவன், கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும், எந்த கோவிலாக வேண்டுமானாலும், எந்த வழிபாட்டு ஸ்தலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிறிது நேரம் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த பழக வேண்டும்.ஆலயங்கள் என்பது பல ஞானிகளின் காலடி பட்ட இடம். அதற்க்கே ஒரு தனி சக்தி உண்டு. கோவிலுக்கு நல்லவர்கள் அதிகம் வருவார்கள். நாம் ஆலயத்தில் அமர்ந்து மனத்தை ஒருமுகபபடுத்த முயற்சிக்கும் பொழுது, பலரின் நல்ல எண்ண அலைகள் நமது மனதிலே ஊடுருவும்.சிலர் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே மனத்தில் வெறுப்பு வரும். காரணம், அந்த மனிதரின் என்ன அலைகள் உங்களை அவ்வாறு வெறுப்படைய செய்கிறது.மிக பிரசித்தி பெற்ற சில ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே மனம் சற்று அமைதி பெறும். அடுத்த சில நிமிடங்களில் விவேக் காமெடீ போல், புதிதாக வாங்கிய செருப்பில் இருந்து ஆரம்பித்து, வீட்டில் ஊசி போன பருப்பு வரை, பொறுப்பே இல்லாமல் நமது மனம் எதை, எதையோ நினைக்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள் சிலர், மனம் குதிரையை விட வேகமாக ஓட கூடியது என்பார்கள் சிலர். மனத்தை விட வேகமாக ஓட கூடிய ஒரு ராக்கேட்டை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இனிமேலும் கண்டு பிடிக்க முடியாது. ஒலியின், ஒளியின் வேகத்தை விட மனோவேகம் அதீத வேகம் வாய்ந்தது.மனம் ஒரு சிறந்த வேலைக்காரன். ஆனால்? மோசமான எஜமானன். நீங்கள் வண்டி ஒட்டும் பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் ஒட்டும் வண்டி இருக்க வேண்டும். வண்டி கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால். மனத்தை போல் அதீத வேகத்தில் இயங்க கூடிய வாகனம் அகில உலகங்களில் எங்குமே இல்லை. அதை மனித சக்தியால் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. உங்கள் மனத்தை இறைவனோடு இரண்டற நீங்கள் கலந்தால் அடுத்த நொடியே உங்கள் மனம் இறைவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். உங்கள் மனத்தை கட்டுப்படுத்தும் சாரதி இறைவனே.நீங்கள் ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் வந்தால், நீங்க்ள் அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத ஃபோன் கால் வந்தால் அதை அட்டர்ன் பண்ணாமலேயே கட் பண்ற மாதிரி, தேவையில்லாத எண்ணங்களை கட் பண்ணுங்க. உங்கள் மனத்தில் கடவுளின் உருவத்தை மட்டுமே நினையுங்கள். எந்த கடவுள் உங்களின் இஷ்ட தெய்வமோ அந்த கடவுளின் உருவத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து தியானம் செய்யுங்கள்.ஆலயம் என்பது ஆனந்த பிரவாகம் சுரக்கும் இடம். அங்கு நீங்கள் மனத்தை ஒருமுகபபடுத்த முயன்றால் மற்ற இடங்களில் நீங்கள் தியானம் பழகுவதற்கும், ஆலயங்களில் தியானம் பழகுவதற்கும் உள்ள வித்யாசத்தை உணரலாம். அதிலும் முதன் முறையாக தியானம் பழகுபவர்கள் ஆலயத்தில் தியானிக்கும் பொழுது, உங்கள் ஆன்மா எளிதாக லயப்படும், வயப்படும், புரியாத பல ஆழ்மன சூட்சுமங்கள் புலப்படும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆத்மார்த்தமாக நீங்களாகவே உணர்ந்தால் தான் உண்டு.நம்முடைய ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். அதிலும் பல நூறு ஆண்டுகளாக பூஜை நடக்கும், மிக புராதனமான ஆலயங்களில் நாம் அதிக, அதீத, தெய்வீக அதிர்வலையை உணரலாம்.

வாழ்க வளமுடன்...



 

 வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம்,

முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்.

முதுமை சீக்கிரம் போகாது.

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.இளமையில் சாப்பிட்ட அத்தனையும் முதுமையில் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்க வேண்டும் இறுதி காலத்தில்.சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும் சிவபெருமான் திருவடிக்கு .சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றால், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.

நமசிவாய வாழ்க.....

திருச்சிற்றம்பலம்.....

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

பாகற்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 பாகற்காய் சாறு 'சுவையில் கசப்பானது, ஆனால் ஆரோக்கியத்தின் பொக்கிஷம்'. மூக்கைச் சொறியாமல் குடித்தால் சூப்பர் ஹீரோ ஆனீர்கள்! பாகற்காய் சாற்றின் அற்புத நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்:

1. இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் சூப்பர் ஸ்டார்

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள பாலிபெப்டைட்-பி (இது இயற்கையான இன்சுலின் போன்றது) இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எனவே இது சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

2. கல்லீரல் பாதுகாப்பாளர்

உங்கள் கல்லீரல் கொஞ்சம் 'ஆஃப்' என்றால் (அதாவது கொழுப்பு கல்லீரல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை), பாகற்காய் சாறு அதை கட்டுக்குள் கொண்டு வரலாம். இது கல்லீரலை நச்சுத்தன்மையாக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.

3. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்

பாகற்காய் சாறு குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது கலோரிகளில் குறைவாக உள்ளது, ஆனால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது, இது எடையைக் குறைக்க உதவுகிறது.

4. செரிமான அமைப்பின் நண்பர்

பாகற்காய் சாறு உங்கள் செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. அஜீரணம், வாயு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், பாகற்காய் சாறு குடிப்பது நிவாரணம் அளிக்கிறது.

5. தோல் மற்றும் முடிக்கு அழகு டானிக்

பாகற்காய் சாறு நச்சுத்தன்மையை நீக்கி, சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. பருக்கள், முகப்பரு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இது தவிர, முடி உதிர்வைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

6. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்

பாகற்காயில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நோய்கள் வராமல் தடுக்கிறது மற்றும் உடலை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது.

7. இதயத்தைக் காப்பவர்

பாகற்காய் சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய்கள் வருவதைக் குறைக்கிறது.

8. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

பாகற்காயில் சில ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

வாழைப்பழம்

 ஆரோக்கியத் தகவல்....

வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி

நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது.

இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை.

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது. நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம் பெரும்பங்கு வகிக்கிறது.வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும். கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழைப்பழம் அரு மருந்தாகத் திகழ்கிறது.

"வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 % குறைக்க முடிகிறது"

வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அனுபவத்தில் அறியாது அதனை உதாசீனப்படுத்துகிறோம்.

Asia 1